லண்டனில் நடந்த துயரச்சம்பவம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு குழந்தைகளின் தாய்: நடந்தது என்ன?

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் தாய் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக, 6 வயது மகன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளான்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Battersea பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் இரண்டு குழந்தைகளின் தாயாரான 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை அடையாளம் தெரியாத மர்மநபர் கத்தியால் குத்தி தப்பியுள்ளார்.

இதையடுத்து இது குறித்து சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், ஆம்புலன்சுடன் விரைந்து வந்த பொலிசார், இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான 30 வயது மதிக்கத்தக்க பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக 40 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் இருப்பவர்கள் கூறுகையில், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 6 வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகளும் இருக்கிறாள்.

சம்பவ தினத்தன்று ஒரு வித சத்தம் கேட்டது.

அதன் பின் அவர் இருக்கும் குடியிருப்புக்கு கீழே இருக்கும் நபர், அந்த பெண்ணின் வீட்டை தட்டிய போது திறக்கவில்லை. இதனால் ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் புரிய முடிந்தது.

இதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி 12:38 மணிக்கு வந்த பொலிசார், வீட்டின் கதவை உடைத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் அழைத்துச் செல்லப்பட்ட அதாவது 13:41 மணிக்கு இறந்துவிட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்