என் மனைவி போய்விட்டாள்: சோகத்தில் தனிமரமாய் நின்ற கணவர் மீண்ட நெகிழ்ச்சி தருணம்

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் மனைவி குண்டுவெடிப்பில் இறந்ததால் அவர் பிரிவால் வாடிய கணவர் தற்கொலைக்கு முயன்று பின்னர் அதிலிருந்து மீண்டது குறித்து பேசியுள்ளார்.

கெவின் ஸ்கெல்டன் என்பவர் தனது மனைவி பிலோமேனா மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பில் பிலோமேனா உயிரிழந்தார்.

மனைவியின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத கெவின் தற்கொலை முடிவுக்கு சென்று அதிலிருந்து மீண்டுள்ளார்.

கெவின் கூறுகையில், என் மனைவி மற்றும் மூன்று மகளுடன் கடைக்கு சென்றேன்.

அப்போது நான் தனியாக ஒரு கடைக்கு சென்ற போது பிலோமேனா மற்றும் மகள்கள் இருந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்தது.

இதில் பிலோமேனா உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் இறந்தார்.

மனைவியின் இறப்பு என்னை பெரிதும் பாதித்தது. அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை.

இதனால் என்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயல பார்த்தேன்.

ஆனால் என் மகள்கள் மற்றும் தாய்க்காக முடிவை மாற்றி கொண்டேன்.

இதன்பின்னர் உரிமம் பெற்ற என் துப்பாக்கியை கடையில் ஒப்படைத்ததோடு, உரிமத்தையும் பொலிசாரிடம் கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்