பிரித்தானிய நாடாளுமன்றம் அருகே தாக்குதல் நடத்திய அகதி: வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்றம் அருகே பொதுமக்கள் மீது காரை மோதவிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர் ஒரு அகதி என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தாக்குதலை முன்னெடுத்தவர் சூடான் நாட்டு அகதி எனவும் இரவு முழுவதும் லண்டன் மாநகரில் அவர் சுற்றித்திரிந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சாலிஹ் காட்டர் என்ற அந்த 29 வயது சூடான் நாட்டவர் சுமார் 4 மணி நேரம் லண்டன் வீதிகளிகள் சுற்றித் திரிந்துள்ளார்.

பின்னர் காலை 7.37 மணியளவில் நாடாளுமன்றம் அருகாமையில் 50.கி.மீ வேகத்தில் காரை செலுத்திய அவர், சைக்கிள் ஓட்டிகள் மீது மோதியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவமானது 17 மாதங்களுக்கு முன்னர் காலித் மசூத் என்பவர் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தின் மீது தமது காரை மோதவிட்டு 5 பேர் கொல்லப்பட்டதை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சைக்கிள் ஓட்டிகள் மீது பாய்ந்த காரில் இருந்து சாரதியை மடக்கிப்பிடித்த பொலிசார், அவரை உடனடியாக விலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் இருந்து வெடிப்பொருட்கள் அல்லது ஆயுதங்கள் என எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பல மணி நேர விசாரணைக்கு பின்னரும் அவர் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து அவரின் தாக்குதல் திட்டம் அமைந்திருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் பயன்படுத்திய Ford Fiesta காரை பதிவு செய்துள்ள இரண்டு முகவரிகளில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்