பிரித்தானியா பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதல்? கோபத்தை ஏற்படுத்தியுள்ள சுற்றுலாப்பயணிகளின் செயல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா பாராளுமன்றம் அருகே இன்று பரபரப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில், சுற்றுலா வந்த நபர்கள் அங்கிருக்கும் பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டது, விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Westminster பகுதியில் உள்ள பிரித்தானியா பாராளுமன்றம் வாசல் அருகேயுள்ள சாலையில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த போது, சாலையில் தவறான பாதையில் படுவேகமாக சீறிவந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியதால் பலர் காயம் அடைந்தனர்.

மோதிய வேகத்தில் அந்த கார் நிலை தடுமாறி குலுங்கும் அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்த கார், பாராளுமன்ற வாசலில் உள்ள இரும்பு தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதி நின்றது.

இதில் சாலையை கடப்பதற்காக சைக்கிளில் காத்திருந்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது, காரை ஏற்றி மக்களை கொல்ல முயன்ற தீவிரவாத தாக்குதலா? என்ற பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு 20 வயது இருக்கு எனவும், கைது செய்யப்பட்ட நிலையிலும், அந்த நபர் பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் காரணமாக பாராளுமன்ற சதுக்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்ட்டர் சுரங்க ரெயில் நிலையம் மூடப்பட்டது. விக்டோரியா டவர் கார்டன்ஸ், மில்பேங்க் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாராளுமன்றத்தின் அருகே இருக்கும் Westminster பாலத்தில் சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணிகள் பலர் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதைக் கண்ட பலரும் இன்று பரபரப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் அங்கிருக்கும் சுற்றுலாப்பயணிகள் இது எல்லாமல் தெரியாமல் தான் புகைப்படம் எடுக்கிறார்களா? பொலிசார் அங்கு இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

மேலும் ஐரோப்பிய நிரூபர் Ben Lewis தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குற்றம் நடந்த இடத்தில் மக்கள் புகைப்படம் எடுப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்