மர்மமாக வீட்டில் இறந்து கிடந்த பச்சிளங் குழந்தை.. விசாரணையில் சிக்கிய 15 வயது சிறுமி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் பிறந்து சில மணி நேரங்களிலே இறந்து கிடந்த குழந்தை பற்றிய விசாரணையில், 15 வயது சிறுமி ஒருவர் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் Lancashire பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 9-ம் தேதியன்று இறந்த நிலையில், பிறந்து சில நிமிடங்களே ஆகியிருந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேசமயம் அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுமி உடல்நிலை குறைபாட்டால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், மயக்கம் தெளிந்த பின்னர் சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது பேசிய சிறுமி, நான் கர்ப்பம் அடைந்திருப்பது எனக்கு தெரியாது. அன்றைய தினம் பாத்ரூமிற்கு செல்லும் போது தான் எனக்கு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையினை என்ன செய்வதென தெரியாமல் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குப்பை தொட்டியில் வைத்துவிட்டேன் என கூறியுள்ளார்.

முன்னாள் படைவீரரான சிறுமியின் தந்தை மற்றும் அவரது மனைவி சம்பவம் நடந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்தனர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிஸார் தரப்பு தெரிவிக்கையில், விசாரணை ஓரளவு முடிந்துள்ளது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அறிக்கை வந்ததும் விரிவான விசாரணையை மேற்கொள்வோம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்