செல்போனுக்கு வந்த மெசேஜ்: அதிர்ச்சியில் உறைந்து போன விதவை பெண்!

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கணவரை கொலை செய்த குற்றவாளி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவுள்ளார் என்ற செய்தி மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பீட்டர் கிரீன் (67) என்பவரின் மனைவி லிண்டா கிரீன் (65). கடந்த 2008-ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்பென்சர் என்பவர் குடிபோதையில் பீட்டரை கொடூரமாக அடித்து கொன்றுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் ஜேம்ஸை கைது செய்தனர். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஜேம்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஸ்பெயினுக்கு சமீபத்தில் சென்றிருந்த பீட்டரின் மனைவி லிண்டாவுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது.

அதை பார்த்து லிண்டா அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதற்கு காரணம் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஜேம்ஸ் விரைவில் விடுதலையாவார் என சிறை துறையிலிருந்து மெசேஜ் அனுப்பட்டிருந்தது.

இது குறித்து லிண்டா கூறுகையில், என் கணவரை ஜேம்ஸ் 32 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.

அவரின் கண்கள் மற்றும் மூளையை வெளியில் எடுத்து கொன்றார்.

இப்படி கொடூரமான கொலையாளியை விடுவிப்பது எப்படி நியாயமாக இருக்கும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜேம்ஸ் போன்ற நபர்களை பொது வெளியில் நடமாட விடுவது ஆபத்தானது என நீதிபதியே முன்னர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்