பிரித்தானிய பாராளுமன்றம் அருகே தாக்குதல்? குற்றவாளியின் புகைப்படம் வெளியானது!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய பாராளுமன்றம் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியதால் பொலிசார் குவிக்கப்பட பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்தின் Westminster பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்றம் அருகே தாறுமாறாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, திடீரென பாதசாரிகளை தாக்குவதைப்போல சென்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற தடுப்பின் மீது மோதி நின்றது.

இதனையடுத்து துப்பாக்கிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், உடனடியாக காரை ஒட்டி வந்த 20 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிஸார் எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில், 50கிமீ வேகத்தில் காரை ஒட்டி வந்து பொதுமக்களை அச்சறுத்தியதால் அவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் சைக்கிளில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்துள்ளதாகவும், விபத்து ஏற்படுத்திய நபருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏதேனும் இருக்குமா என்ற கோணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியே பெரும் பரபரப்பில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சாலையினை பொலிஸார் முடக்கியுள்ளனர்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்