இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமண உறவு கடைசி வரை நீடிக்காது: சகோதரி விமர்சனம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் குறித்து தொடர்ந்து அவரது சகோதரி சமந்தா பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

திருமணம் முடிந்த பின்னர் தனது தந்தை தாமஸ் மெர்க்கலை இன்று வரை சந்திக்காமல் நாட்களை கடத்திவரும் மேகன், தனது தந்தைக்கு என்ன செய்தாரோ அதையே தான் தனது கணவர் ஹரிக்கும் செய்ய காத்திருக்கிறார்.

ஒரு இளவரசர் என்ற காரணத்தினாலேயே ஆசைப்பட்டு, ஹரியை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக இதற்கு முன்னர் மெர்க்கல் தனது தந்தையிடம் திருமணத்திற்கு முன்னர் தெரிவித்தார் என மெர்க்கல் கூறியுள்ளார்.

மேலும், இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கலின் திருமண உறவு கடைசிவரை நீடிக்காது, தனது தந்தையை பார்க்காமல் புறக்கணிப்பதுபோன்று ஒரு காலத்திற்கு பிறகு தனது கணவரையும் புறக்கணித்துவிடுவார் என கூறியள்ளார்.

தனது குடும்ப உறுப்பினர்களே தன்னை இவ்வாறு விமர்சனம் செய்துவந்தாலும், மெர்க்கல் இதுகுறித்து பதில் எதுவும் தெரிவிக்கவில்லை, மேலும் மெர்க்கலும் அவரது அம்மாவின் மீது பாசம் அதிகம். தனது தாயின் அரணவனைப்பில் வளர்ந்த இவர், அவரது சொல்படி கேட்டு நடக்கிறார் என கூறப்படுகிறது,

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்