முன்னாள் காதலியை சந்தேகப்பட்ட நபர் செய்த செயல்: காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது முன்னாள் காதலி வேறொருவருடன் தொடர்பிலிருப்பதாக சந்தேகமடைந்த காதலன் அவளை ட்ராக் செய்யும் கருவி ஒன்றை அவளது காரில் பொருத்தினார்.

David Jones (37) தனது முன்னாள் காதலியான Stacey Buckley மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவள் எங்கு செல்கிறாள், யாருடன் பழகுகிறார் என்பதை அறிய முடிவு செய்தார்.

அதனால் அவளது காரில் ட்ராக்கிங் கருவி ஒன்றை பொருத்திய David அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு சென்றார்.

அவர் சந்தேகப்பட்டது போலவே அவர் கண்டு பிடித்த விடயம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால் Staceyயுடன் இருந்தது ஒரு காதலர் அல்ல காதலி.

David, Staceyயைப் பிரிந்தபின் அவள் ஒரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் தன்னை David வேவு பார்ப்பதைக் குறித்து Manchester நீதிமன்றத்தில் புகாரளித்தார் Stacey.

தான் எங்கு சென்றாலும் தன்னை David பின் தொடர்வதாகவும், தான் அவரைப் பிரிந்த பின்னும் எப்போதும் அவரைக் குறித்த அச்சத்திலேயே வாழ்வதாகவும் தெரிவித்திருந்தார் அவர்.

வழக்கை விசாரித்த Manchester நீதிமன்றம், இனி Staceyயைப் பார்க்க Davidக்கு தடை விதித்துள்ளதோடு அவரை குற்றவாளியாகத் தீர்த்துள்ளது.

இந்த மாத இறுதியில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்