நான் சாகப்போகிறேன்.. இறுதியாக என் மகனை பார்க்க அனுமதி தாருங்கள்..பிரித்தானிய தாயின் உருக்கமான கடிதம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் இறுதியாக தன் மகனுடன் வெளியில் செல்ல வேண்டும் என விடுமுறை வேண்டி எழுதிய கடிதத்திற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்து அருகே Buckinghamshire பகுதியை சேர்ந்தவர் Angela Rose (36). இவருக்கு 8 வயதில் Carlo என்ற மகனும், 13 வயதில் Niko என்ற மகனும், 18 வயதில் மகள் ஒருவரும் உள்ளார்கள். கடந்த 14 மாதங்களுக்கு முன்பு Angela-விற்கு மார்பக புற்றுநோய் இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

புற்றுநோயின் தீவிரம் அதிகமடைந்ததால், உடலில் எலும்புகள் மற்றும் மூளை பகுதிக்கும் பரவியுள்ளது. இதனால் இன்னும் சில தினங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து இருக்கும் சில தினங்களில் தன் மகன்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்த தாய், தனது 8 வயதுமகன் படிக்கும் Stanton Middle School-க்கு உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், எனக்கு புற்றுநோயின் தீவிரம் அதிகரித்துள்ளதால் நான் உயிருடன் இருக்கும் சில தினங்களுக்குள், எனது மகனுடன் ஒரு வார விடுமுறையை கழிக்க ஆசைப்படுகிறேன். இதனை ஏற்றுக்கொண்டு அவனுக்கு விடுப்பு வழங்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவருக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான Angela தன்னுடைய கடிதத்தினை முகப்புத்தகத்தில் பதிவிட்டார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து உள்ளூர் கவுன்சிலர் விளக்கம் அளித்தார்.

மாணவன் பள்ளியில் 98 சதவிகித வருகையை பதிவு செய்துள்ளான். அவனது தாய்க்கு இருக்கும் நோயின் தன்மையை பள்ளி நிர்வாகம் முழுமையாக உணரவில்லை. பள்ளியின் இத்தகைய செயலுக்காக நாங்கள் வருந்துகிறோம் என தெரிவித்தார்.

மேலும் மாணவனுக்கு விடுப்பு வழங்கப்படும் எனவும், ஆனால் அதனை பள்ளி விடுமுறையாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் Angela இன்னும் கோபமடைந்துள்ளார். ஏனெனில் சம்மந்தப்பட்ட பள்ளியில் விடுப்பு எடுத்தால் £60 பவுண்ட் அபராதமாக விதிக்கப்படும். அதனை 29 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால் அபராதத்தொகை £120 பவுண்டாக அதிகரிக்கும் என்பது விதிமுறையாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்