பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்- விக்டோரியா இடையேயான ஆச்சரியமளிக்கும் ஒற்றுமைகள்!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் மறக்க முடியாத தடங்களை பதித்த விக்டோரியா மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணி இடையேயான ஒற்றுமைகள் குறித்து இங்கு காண்போம்.

பிரித்தானிய மகாராணிகள் விக்டோரியா மற்றும் இரண்டாம் எலிசபெத் ஆகியோருக்கு இடையே நிறைய விடயங்கள் ஒரே மாதிரி ஒத்துப் போகின்றன.

  • இவர்கள் இருவரும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள் (எலிசபெத் தற்போது அரசியாக நீடித்து வருகிறார்). எனினும், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீண்ட காலம் அரசியாக இருந்த விக்டோரியாவின் சாதனையை எலிசபெத் முறியடித்தார்.
  • விக்டோரியா தனது 18வது வயதிலும், இரண்டாம் எலிசபெத் தனது 25வது வயதிலும் என இருவருமே இளம் வயதில் ராணியாக பொறுப்பேற்றனர்.
  • இருவரும் மகிழ்ச்சியான இல்லற உறவில் நீடித்து இருந்தவர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை இருவரும் பெற்றிருந்தனர்.
  • நவீன தொழில்நுட்பத்தின் மீது இருவருக்குமே ஆர்வம் மிக அதிகம்.
  • விக்டோரியா மற்றும் இரண்டாம் எலிசபெத் இருவர் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொள்ள முயற்சிகள் நடந்துள்ளன.
  • இன்றுவரை பிரித்தானிய மக்கள் விக்டோரியா மற்றும் எலிசபெத் மீது மதிப்பும், பேரன்பும் வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்