ஸ்காட்லாந்தில் பள்ளியை தீ வைத்து கொளுத்திய 13 வயது மாணவி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து சம்பவத்தில் 13 வயது மாணவிக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் Glasgow பகுதியில் செயல்பட்டு வரும் Howford Primary School-ல் கடந்த திங்கட்கிழமையன்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 40 தீ அணைப்பு படை வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தின் போது பள்ளியைசுற்றிலும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வீடுகளின் ஜன்னல்களை மூடுமாறும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஏனெனில் தீயில் அளவு அந்த அளவிற்கு அதிகமாக பரவியிருந்தது.

பின்னர் இந்த அசம்பாவிதம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், சம்பவத்தில் 13 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்