பிரித்தானிய சாலையில் அரங்கேறிய கோரவிபத்து: சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தின் Bradford நகராட்சியில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

West Yorkshire-ல் உள்ள Bradford பகுதியில் இருந்து பிஎம்டபிள்யு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அதை பொலிஸாரின் வாகனம் ஒன்றும் பின் புறமாக தொடர்ந்துள்ளது.

வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த கார் Toller Lane பகுதியை அடையும்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது, அங்கிருந்த மரம் ஒன்றின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காரில் பயணம் செய்த 4 ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பின்னர் விபத்து குறித்து காவல்துறையினர் பேசுகையில், இந்த சம்பவம் இயற்கையாக நடந்திருந்தாலும், இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்