ஐந்து வயதிலேயே பிரித்தானிய ராணிக்கு சமமாக கருதப்படும் குட்டி இளவரசர்: எதில் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஐந்து வயதே ஆன பிரித்தானிய குட்டி இளவரசர் ஜார்ஜ் பிரித்தானிய மகாராணிக்கு சமமாக ஒரு விடயத்தில் மதிக்கப்படுகிறார், எதில் தெரியுமா?

சிறப்பாக உடையணிவோர் பட்டியலில் மகாராணி முதலிடத்தைப் பிடிக்க ஐந்தே வயதில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார் குட்டி இளவரசர் ஜார்ஜ்.

இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் இளவரசர் சார்லசில் இந்நாள் மனைவியான கமீலா. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிப்பவர்கள், இளவரசி கேட் மற்றும் இளவரசி மேகன் மெர்க்கல்.

Tatler என்னும் பத்திரிகை ஆண்டுதோறும் சிறப்பாக உடையணிவோரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டின் சிறப்பாக உடையணிவோர் பட்டியலில் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

பெரும்பாலும் ஷார்ட்ஸ், jumpers மற்றும் முழங்கால் உயர சாக்ஸ் அணியும் குட்டி இளவரசர் டிஸ்னி கார்ட்டூன் கதாநாயகன் ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்