விசா முடிந்தும் தங்கியிருந்த பிரித்தானிய பெண்: கேள்வி கேட்ட குடியேற்ற அதிகாரியின் கன்னத்தில் பளார் விட்ட வீடியோ

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த் Auj-e Taqaddas என்ற 42 வயது பெண்மணி இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா வந்த நிலையில், பிப்ரவரி 18ம் திகதியுடன் விசா முடிவடைந்துவிட்டது.

இருப்பினும், இவர் அந்நாட்டை விட்டு புறப்படாமல் 150 நாட்கள் இந்தோனேஷியாவில் இருந்துள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியாவிற்கு செல்வதற்காக Ngurah Rai விமானநிலையத்திற்கு வந்த இவர் Boarding Pass எடுத்துக்கொண்டு, உள்ளே செல்கையில் குடியேற்ற அதிகாரி, இவர் சட்டவிரோதமாக தங்கியிருந்ததை கண்டுபிடித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால், கோபம் கொண்ட அப்பெண், நான் உங்கள் நாட்டில் 150 நாட்கள் அதிகமாக இருந்ததற்காக அபராதம் செலுத்தியுள்ளேன். ஒரு நாளைக்கு $25 டொலர் செலுத்தியுள்ளேன். இதுவரை 150 நாட்களுக்கு $4,000 டொலர் செலுத்தியுள்ளேன் என வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும், விமானத்தில் செல்வதற்கும் இவர் அனுமதிக்கப்படாத காரணத்தால், கோபம் கொண்ட இப்பெண்மணி, நீ தான் பணம் செலுத்தினாயா? நான் அபராதம் செலுத்திதான் இங்கு இருந்திருக்கேன் என்று பதில் கூறியும் எதற்காக இப்படி நடந்துகொள்கிறாய் என ஆவேசம் கொண்டு, குடியேற்ற அதிகாரியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட அப்பெண் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்