லண்டனில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட நபர்: இருவர் மருத்துவமனையில்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் Warham பகுதியில் மர்ம நபர்கள் மூன்று பேருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Camberwell பகுதியில் உள்ள Warham தெருவிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

மாலை சுமார் 7.20 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த மருத்துவக்குழு, அங்கிருந்து மூன்று நபர்களை மீட்டுள்ளனர்.

இதில் ஒருவர் சம்பவவிடத்திலேயே கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்த இருவரை மீட்ட மருத்துவக்குழுவினர் ஹெலிகொப்டர் மூலம் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள பொலிசார்,

இந்த ஆண்டு மே மாதத்தில் இதே பகுதியில் வைத்தே 17 வயது இளைஞர் Rhyhiem Borton மர்ம நபர்களால் துப்பாக்கி குண்டுக்கு பலியானார் எனவும் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை சம்பவங்களுக்கு அரசு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்போது Rhyhiem-ன் தாயார் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்