முதலிரவை படம்பிடிக்க ஆட்கள் தேவை: இளம்ஜோடியின் வினோத விளம்பரம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் முதல் இரவை படம்பிடிக்க வீடியோகிராபர் தேவை என புதுமணத்தம்பதியினர் வினோதமான விளம்பரம் கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த இளம்ஜோடியினர் வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளனர்.

திருமணத்துடன், அன்றைய இரவு நடக்கும் முதலிரவு நிகழ்ச்சியையும் தங்களது வாழ்க்கையின் ஒரு முக்கிய நிகழ்வாக கருதுகின்றனர்.

அதனை வீடியோ எடுப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு முதல் விருப்புமுள்ள நபரை ஜோடியினர் தேடி வருகின்றனர்.

ஆனால் அதற்கான விருப்பமுள்ள நபர் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக Bark.com என்ற இணையதளத்தில் அவர்கள் விளம்பரம் கொடுத்துள்ளனர். முதலிரவை வீடியோ எடுக்கும் அந்த நபருக்கு £2,000 பவுண்ட்ஸ் பணம் வழங்கப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் எடுக்கப்படும் வீடியோ ஜோடியை தவிர வெளியில் யாருக்கும் சொல்ல கூடாது எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்