பொலிசார் துரத்தலால் அதிவேகத்தில் சென்ற கார்! பரிதாபமாய் பலியான இளம்பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தின் Birmingham பகுதியில் பொலிஸாரின் துரத்தலுக்கு பயந்து வேகமாக காரை செலுத்திய இளைஞரால் இளம்பெண் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Birmingham பகுதியில் உள்ள Kingstanding அருகே, Volkswagen Golf காரில் Sarah Giles(20) என்ற இளம்பெண் பயணம் செய்துள்ளார்.

அப்பொழுது சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆடி கார் ஒன்று திருப்பட்டதாக நினைத்த பொலிஸார் வேகமாக துரத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனால் ஆடி காரை ஒட்டிய Brandon Daniels என்ற 20 வயது இளைஞர், அதிவேகத்தில் செல்ல முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென அருகில் சென்று கொண்டிருந்த Volkswagen காரில் மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த Sarah சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட Volkswagen கார் ஓட்டுநர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதேசமயம் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், Brandon மீது ஆபத்தான வகையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதால் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Brandon- உடன் ஆடி காரில் பயணம் செய்த 17 மற்றும் 20 வயதுள்ள இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்