இளவரசி டயானாவை நினைவுபடுத்தும் இளவரசி கேட்: சில அபூர்வ புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

யார் இரண்டாம் டயானா என்னும் போட்டி எப்போதுமே பிரித்தானிய இளவரசிகளிடையே நிலவினாலும், தன் நடை உடை பாவனைகளில் தன் கணவருக்கு மிகவும் பிரியமான தன் மாமியாரைப் போலவே செயல்படும் கேட், டயானாவைப்போல் உடை உடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான் என்பதை நிரூபிக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பு.

நிச்சயதார்த்த உடையிலிருந்து பிரசவித்தபின் உடுத்திய உடை வரை அவரது சாய்ஸ் டயானாதான்.

இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்த அன்று அவரைத் தன் கைகளில் ஏந்தியபடி மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது அவர் அணிந்திருந்த வெள்ளைப் புள்ளிகள் போட்ட நீல நிற உடையைக் கண்டதும் சொல்லி வைத்தாற்போல் மக்கள் அவரை இளவரசர் வில்லியம் பிறந்ததும் அவரைத் தூக்கிக் கொண்டு வந்த இளவரசி டயானாவுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள்.

டயானாவுக்கு பனிச்சறுக்கு விளையாட்டு என்றால் உயிர். இப்போது இளவரசர் வில்லியமும் கேட்டும் அவரை பின் தொடர்கிறார்கள்.

சோகமான நாட்களில் உடைகளைத் தேர்வு செய்வதில் கூட இருவருக்கும் ஒரு ஒற்றுமை நிலவுவதைக் காணலாம்.

இஸ்லாமிய நாடுகளுக்கு பயணப்படும்போது இளவரசி டயானா தனது தலையை ஸ்கார்ப் அணிந்து மறைத்துக் கொள்வதைப்போலவே அவரது மருமகளும் செய்கிறார்.

2016ஆம் ஆண்டு தனியாக தான் மேற்கொண்ட தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின்போது கேட் அணிந்திருந்த உடை 1988இல் டயானா அணிந்த ஒரு உடையை நினைவுபடுத்தியது.

1981ஆம் ஆண்டு டயானா செய்தது போலவே தனது நிச்சயதார்த்தத்திற்கு பின் முதன்முறை வெளியே வந்தபோது கேட்டும், உடையும் ஏன் மோதிரமும் கூட அணிந்திருந்தார்.

இருவரும் அணிந்துள்ள மனதை மயக்கும் பிங்க் நிற உடை.

2012ஆம் ஆண்டு அயர்லாந்து வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் டயானாவைப் போலவே கேட் உடை அணிந்திருந்தார்.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி குட்டி இளவரசர் லூயிஸ் பிறந்தபோது கேட் மீண்டும் ஒரு முறை டயானா நின்ற அதே இடத்தில் நின்று தனது மாமியாரை கௌரவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers