லண்டனில் மிகவும் ஆபத்தான இடங்கள் எது தெரியுமா?- அதிரவைக்கும் ரிப்போர்ட்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் சமீபகாலமாக கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து மட்டும் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்து சம்பவங்களால் இறந்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று மெட்ரோ பொலிசாரின் டேட்டாவை வைத்து ஜுன் 2017 மற்றும் ஜுன் 2018-ஆம் ஆண்டு வரை லண்டனின் ஆபத்தான நகரங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் Westminster நகரமே முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நகரத்தில் மட்டும் 63,204 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 14,351 வன்முறை தொடர்பான குற்றங்கள் எனவும் இதில் கொலைகள் மற்றும் கொடூர முறையில் தாக்குதல் போன்றவையே அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Westminster பகுதியில் 5 கொலைகள் நடந்துள்ளதாகவும் Southwark-ல் 13 கொலைகள் Newham பகுதியில் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

Sutton மற்றும் Bexley பகுதியில் கொலைகள் நடைபெறவே இல்லை எனவும் Lewisham பகுதியில் மக்கள் வாழ்வதற்கு சவுகரியமாக இல்லை என்றும் இங்கு வன்முறைகள் அதிகம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக Westminster பகுதியில் அதிகளவிலான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த ஜுன் மாதம் முதல் இந்த ஜுன் வரை மட்டுமே 1,304 பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே போன்று Croydon பகுதியில் 444 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

Westminster-ல் கடந்த ஆண்டு மட்டும் 2,796 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இதோடு ஒப்பிடும் போது Kingston upon Thames-ல் 236 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லண்டனில் உள்ள நகரங்களில் கடந்த ஆண்டில் நடந்த குற்ற சம்பவங்களை வைத்து பார்க்கையில் Kingston upon Thames ஒரு பாதுகாப்பான நகரமாக இருந்துள்ளதாகவும், இங்கு மட்டும் கடந்த ஆண்டு 12,609 அளவில் குறைந்த அளவிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்