சொகுசு விமானத்தில் தனி ஒருவனாக பயணித்த அதிர்ஷ்டசாலி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

கிரீஸ் நாட்டில் இருந்து பிரித்தானியாவிற்கு தனி விமானத்தில் பயணம் செய்து மகிழ்ச்சியில் திளைத்துள்ளார் சாத் ஜிலானி.

நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக பிரித்தானியாவின் பிரிமிங்ஹாம்மில் இருந்து கிரீஸ் நாட்டில் இருந்து கோர்பு தீவுக்கு சென்றுள்ளார். அங்கு திருமணத்தை முடித்துவிட்டு, கோர்பு விமான நிலையத்திற்கு வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஜிலானியை வரவேற்கும் போதே, "வெல்கம் அப்போர்ட் யுவர் பிரைவேட் ஜெட் சார்" என்று ஆச்சரியத்தை தந்துள்ளனர்.

புதிய போயிங்738 வகை விமானம், மொத்தமாக 168 சீட்டுகளில் தனி ஒருவனாக பயணித்திருக்கிறார். இந்த கோர்பு தீவில் இருந்து பிரிமிங்ஹாம் விமான வழி, பயணிகள் அரிதாக பயன்படுத்துவது. அன்று வேறொருவரும் டிக்கெட் பெற்றுள்ளார், கடைசியில் அவரும் வரவில்லை என்பதால் அந்த விமானம் 28 வயதுடைய சாத் ஜிலானியின் தனி விமானமாக 2:30 மணிநேரத்திற்கு மாறியுள்ளது.

சொகுசாக அதுவும் சாதாரண கட்டணமான 40 யூரோவில்(இந்தியாவில் ரூபாய் 3,200) 2:30 மணி நேரம் பயணித்துள்ளார். பிரிமிங்காமுக்கு விமானம் வந்து சேர்ந்ததும், அவருக்கு 60 யூரோவில் இன்னுமொரு விமான டிக்கெட் ஆஃபராக வழங்கப்பட்டுள்ளது.

தனது பயணத்தை ஜிலானி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்