பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் இளைஞர் செய்த வியக்க வைக்கும் செயல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரபல பாடகி ஒருவரின் இசை நிகழ்ச்சியின் இடையே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் இளைஞர் ஒருவர் அவருடைய காதலியிடம், தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவில் பிரபல பாடகியாக வலம் வரும் Rita Ora(27) கடந்த சில நாட்களுக்கு முன்பு Slessor Gardens நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார்.

அப்பொழுது Liam Mclean என்ற இளைஞர் Rita-வின் அனுமதியுடன் தனது காதலி Aimee Cuthbert-ஐ மேடைக்கு அழைத்தார்.

நான் உன்னை எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என கூறியவாறே, "Aimee என்னை திருமணம் செய்து கொள்கிறாயா" என கேட்கிறார்.

அதற்கு அவருடைய காதலியும் ஒப்புக்கொள்ள, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் சத்தமிடுகின்றனர்.

அதேசமயம் பாடகி Rita-வும் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதை போன்று அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்த மேலாளர் Sarah Craig, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட தொடர்ந்து பலரும் காதல் ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்