பிரித்தானிய மகாராணியின் ஆசை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்து பிள்ளைகள் ஒரு சாமான்ய குடும்பத்து பிள்ளைகள் போன்று வளர்வதையே பிரித்தானிய மகாராணி விரும்புவதாக இளவரசர் வில்லியம் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் பிரித்தானிய அரச குடும்பத்து பிள்ளைகளுக்கென்று பல விதிமுறைகள் இருக்கின்றன. இவர்களால் பிற குழந்தைகள் போன்று வாழ இயலாது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், இளவரசி டயானா அரச குடும்பத்து மருமகளானவுடன் இந்த விதிமுறைகள் மெது மெதுவாக தகர்க்கப்பட்டன.

இருப்பினும், டயானாவின் கொள்கைளில் மகாராணி எலிசபெத்துக்கு முரண்பாடு இருந்த காரணத்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், வில்லியம் - கேட் தம்பதியினர் தங்கள் குழந்தைகளை சாதாரண குழந்தைகள் போன்று வளர்க்க வேண்டுமே என்பதே அவர்களது ஆசை என கூறியுள்ள நிலையில், பிரித்தானிய மாகராணியின் ஆசையும் அதுவே என கூறியுள்ளனர்.

தற்போது, அரச குடும்பத்து பிள்ளைகளில் இளவரசர் ஜார்ஜ் லண்டனில் உள்ள Thomas' Battersea பள்ளியில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார். தான் யார்? மற்றும் உலக நடைமுறைகளோடு பொருத்திக்கொண்டு வாழ்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.

இவரைப்போன்றே, அவரது சகோதரர்களுக்கும் இந்த முறையே கடைபிடிக்கப்படவிருக்கிறது. அரச குடும்பத்து பிள்ளைகள் பொது இடங்களில் பிரபலமாவதை மகாராணி விரும்பவில்லை, மாறாக சாதரண குடும்பத்து வாழ்க்கை முறையே அவர்கள் வாழ வேண்டும் என விரும்புவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்