ஆத்திரமடைந்த காதலனால் அரங்கேறிய கொடூர சம்பவம்: அதிர்ச்சியளிக்கும் காணொளி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் காதலியுடன் ஏற்பட்ட தகராறின் போது, காதலன் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பெண் சுயநினைவிழந்து மயக்கமடைந்து தரையில் விழும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் Essex அருகே Gants Hill பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வெளியே ஒரு காதல் ஜோடிக்கு இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது பெரும் சத்தத்துடன் காதலனின் முகத்தை பார்த்து அந்த பெண் சத்தமிடுகிறார். அதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கும் காதலன் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, பெண் முகத்தில் வேகமாக ஒரு குத்து விடுகிறார்.

வீடியோவை காண...

அதனை பொறுத்துக் கொண்டு காதலி மீண்டும் அந்த இளைஞரை நெருங்குகிறார். இந்த முறை காதலன் ஓங்கி முகத்தின் மேல் குடுத்த குத்தில், சம்பவ இடத்திலேயே அந்த பெண் சுயநினைவிழந்து மயங்கி விழுகிறார். இதனை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்படவில்லை என்றாலும், இந்த காணொளி இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்