கண்ணு தெரியாத நபரின் வீட்டில் இருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு! அதன் பின் நடந்த திகில் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பிடமிருந்து தப்பியுள்ள அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

பிரித்தானியாவின் Devon பகுதியில் உள்ள Exeter-ல் 60 வயது மதிக்கத்தக்க Stuart Saunders கண் தெரியாத முதியவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சம்பவ தினத்தன்று பாடல் கேட்டுக் கொண்டிருந்த போது, வீட்டின் பாத்ரூமில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததால், பாத்ரூமில் இருக்கும் ஷாம்பூ. பிரஸ், பாட்டில் போன்ற உபகரணங்கள் கீழே விழுந்திருக்கலாம் என்று நினைத்துள்ளார்.

தனக்கு உதவியாக இருக்கும் வேலைக்கார நபரை அழைத்துள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து சத்தம் வரவே இவர் பாத்ரூம் அருகே சென்றதாக கூறப்படுகிறது.

அதற்குள் அங்கு வந்த வேலைக்கார நபர் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் Stuart Saunders பின்னே அழைத்துள்ளார்.

இது குறித்து வேலைக்கார நபர் Jason கூறுகையில், நான் பாத்ரூமின் கதவை திறந்து பார்த்த போது, 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பாத்ரூமின் பைப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. உடனடியாக பின்னே வந்துவிட்டேன்.

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன் பின் உடனடியாக RSPCA-வுக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் உடனடியாக வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இதை அறியாமல் Stuart Saunders பல முறை அந்த பாம்பை பிடிக்க முற்பட்டதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்