பிரித்தானிய அரச குடும்பத்தால் என்னை விலை பேச முடியாது: மேகன் மெர்க்கலின் தந்தை காட்டம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்ட பின்னர் மேகன் மெர்க்கல் தம்மை அவரது வாழ்க்கையில் இருந்து கொடூரமாக அகற்றுவதாக தாமஸ் மெர்க்கல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது மகளுக்கு பிறக்கும் தனது பேரப்பிள்ளைகளை காணும் வாய்ப்பு தமக்கு அமையுமா என்பது சந்தேகமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரித்தானிய அரச குடும்பத்தால் தம்மை விலை பேச முடியாது என தாமஸ் மெர்க்கல் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேகன் மெர்க்கலின் 37-வது பிறந்த நாளை எதிர்வரும் சனிக்கிழமை அவர் கொண்டாட உள்ளார்.

இளவரசர் ஹரியுடன் திருமணம் முடிந்து கடந்த 10 வாரங்களாக மேகன் மெர்க்கல் தமது தந்தையுடன் பேசவில்லை என கூறப்படுகிறது.

தற்போது மேகன் மெர்க்கல் தமது தொலைபேசி எண்களையும் மாற்றியுள்ளார். இதனால் அவரை தொடர்பு கொள்ளும் கடைசி வாய்ப்பையும் தாம் இழந்துள்ளதாக கதறும் தாமஸ் மெர்க்கல்,

ஆகஸ்டு 4-ஆம் திகதி மேகன் மெர்க்கலின் பிறந்த நாள், அவருக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும். ஆனால் அவர் அதை பார்ப்பாரா இல்லை பொதுமக்கள் அனுப்பும் ஆயிரக்கணக்கான வாழ்த்து அட்டைகளில் அதுவும் ஒன்றாக கருதப்படுமா என்பது தெரியவில்லை,

இதுபோன்ற சித்திரவதையை தாங்குவதை விட சாவதே மேல் என கண்கள் பனிக்க தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்