லண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்கிய பெண்மணியால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்கிய பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் உள்ள Kilburn High Road பகுதியில் நேற்றிரவு இந்த பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் ஒரு பெண்மணி உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

Kilburn High Road பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரத்தை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

சாலை விபத்து சம்பவம் ஒன்று பின்னர் கைகலப்பாக மாறியதாகவும், அதுவே கத்தியால் தாக்குமளவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே பெண் ஒருவர் கத்தி ஒன்றை உருவி தமது நண்பரிடம் கைமாறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் மீது கத்தியால் தாக்கிய பெண்ணையும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்