பிரித்தானியாவில் வரலாறு காணாத வெயில்! தயார் நிலையில் தீயணைப்பு வண்டிகள்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 30 டிகிரிக்கு மேல் வெப்பநிலை நிலவுவதால், தீப்பிடிக்கும் வாய்ப்பு அதிக உள்ளதாகக் கூறி அங்காங்கே தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இம்மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு 38.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, லண்டன் மற்றும் ஐரோப்பா இடையிலான யூரோஸ்டார் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செயிண்ட் பன்க்ராஸ் ரயில் நிலையத்திற்கு செல்லும் ரயில்பாதை உருகியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரயில்கள் தாமதமாகும் நேரம் குறைந்தபட்சமாக ஒரு மணிநேரம் என்ற நிலை உள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தினால், முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்திற்கு ஊழியர்கள் மேல் ஜாக்கெட் இல்லாமல் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரத்த தானம் செய்பவர்களில் பலருக்கு உடலில் நீராதாரம் குறைந்ததால், ரத்த தானமும் முடங்கியுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர் வெப்ப அலை பிரித்தானியாவைத் தாக்கியுள்ளதால், நேற்றைய தினம் 'Furnance Friday' என்று ஆகியுள்ளது.

இந்நிலையில், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை காரணமாக தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால், அங்காங்கே தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலை உள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்