பிரித்தானியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய இலங்கை உணவகம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவின் Croydon பகுதியில் வாழும் மக்களுக்கு தெரிவு செய்ய கூடிய வகையில் நூற்றுக்கும் அதிகமான உணவகங்கள் உள்ளன.

இந்நிலையில் TripAdvisorயினால் பிரபலமான 10 உணவகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பொது மக்களால் அதிகம் விரும்பி உணவு பெற்றுக் கொள்ளும் 10 உணவங்களை TripAdvisor தெரிவு செய்துள்ளது.

அதற்கமைய அந்த பட்டியலில் இலங்கை உணவகம் ஒன்று முதலிடத்தை பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் Croydon பகுதியில் Addington வீதியில் அமைந்துள்ள இலங்கை உணவகமே இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

“Yaalu Yalu” என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற இந்த உணவகம் பொது மக்களால் அதிகம் விரும்பப்பட்ட உணவமாக தெரிவாகியுள்ளது.

அந்த பகுதியில் பல வருடங்களாக இந்த உணவகம் இயங்கி வருகிறது. அங்கு இலங்கை உணவுகளும் இயற்கையான உணவுகளுமே அதிகம் உள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள ஏனைய உணவகங்களை விடவும் Yaalu Yalu உணவகத்தில் சுவையான உணவுகள் உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்