10 வயது குறைவான நபரை திருமணம் செய்யப்போகும் தோழி: சந்தோஷத்தில் இளவரசி மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

தனது தோழியும், நடிகையுமான பிரியங்கா சோப்ராவின் காதல் குறித்து இளவரசி மெர்க்கல் சந்தோஷம் அடைந்து மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது.

இந்நிலையில், தனது காதலரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்க மருமகளாகவிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

திருமணம் என்பது பெண்ணியவாத கருத்துக்களுக்கு எதிரானது அல்ல. எனது கொள்கை நிலைப்பாடுகளுக்கு திருமணம் இடையூறாக இருக்காது என்று நினைக்கிறேன் என பிரியங்கா கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரியங்காவின் காதல் உறவு குறித்து அறிந்துகொண்ட அவரது நெருங்கிய தோழியும், பிரித்தானிய இளவரசியுமான மேகன் மெர்க்கல் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க வாழ்த்து தெரிவித்து, பரிசு ஒன்றையும் அளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்