இவர் நிச்சயம் ஒரு நாள் ராஜாவாக ஆவார்: நிரூபிக்கும் குட்டி இளவரசர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
326Shares
326Shares
ibctamil.com

பிரித்தானிய குட்டி இளவரசர் லூயிஸ் அவரது ஞானஸ்நானத்தன்று தனது தாயான இளவரசி கேட்டுடன் இருக்கும் புகைப்படங்களில் அவர் நிச்சயம் ஒரு நாள் ராஜாவாவார் என்று கூறும் அளவில் அவரது முகம் ஜொலிக்கிறது.

குட்டி இளவரசர் லூயிஸின் ஞானஸ்நான புகைப்படங்களை இன்று கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.

ஞானஸ்நான ஆராதனையின்போது நன்றாக உறங்கிய குட்டி இளவரசர், Clarence இல்லத் தோட்டத்தில் புகைப்படம் எடுக்கும்போது மட்டும் நன்றாக விழித்து பொக்கை வாயை நன்றாகத் திறந்து பிரகாசமாக சிரிக்கிறார்.

இன்று காலை 10 மணியளவில் இந்த புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டன.

புகைப்படத்தில் இளவரசர் லூயிஸ் அணிந்திருக்கும் அந்த உடையானது எலிசபெத் மகாராணி, அவரது மகன்கள், பேரப்பிள்ளைகள் உட்பட அனைவரும் ஞானஸ்நானத்தன்று அணிந்த பாரம்பரிய உடையாகும்.

2008ஆம் ஆண்டு அந்த உடையின் நிலைமை சற்று மோசமானதால் பாரம்பரிய உடையை பாதுகாத்து வைப்பதற்காக மகாராணியாரின் மூத்த உடை வடிவமைப்பாளரான Angela Kelly அதே போன்ற ஒரு உடையை கையாலேயே தைத்து தயார் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்