மைதானத்தில் விளையாடும் போது சுருண்டு விழுந்து இறந்த வீரர்: கதறி துடித்த சக வீரர்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா
622Shares
622Shares
ibctamil.com

பிரித்தானியாவை சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார்க்‌ஷயர் ஆண்கள் லீக் ரக்பி போட்டி Heworth-ல் நேற்று நடைபெற்றது.

இதில் Birkenshaw Bluedogs என்ற அணிக்காக மேக்ஸ் பிளாகிலி (32) விளையாடினார்.

மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது மேக்ஸுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள் மேக்ஸுக்கு சிகிச்சையளிக்க முயன்ற நிலையில் அதற்கு முன்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்களும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

மேக்ஸின் நண்பர் லீ கூறுகையில், அவருக்கு பிடித்தததை தான் மேக்ஸ் எப்போதும் செய்வார்.

உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

இதே போல பலரும் மேக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்