மரணம் நெருங்கிவிட்டது... அழைத்து பேசுங்கள்: பிரித்தானிய அரச குடும்பத்திடம் கெஞ்சும் மெர்க்கலின் தந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
380Shares
380Shares
ibctamil.com

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலின் திருமணத்திற்கு பின்னர் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், தமது மரணம் நெருங்கி விட்டதாகவும் மெர்க்கலின் தந்தை தாமஸ் கண்கலங்கியுள்ளார்.

உடல் நிலையை காரணம் காட்டி மேகன் மெர்க்கலின் திருமணத்தில் தாமஸ் மெர்க்கல் கலந்துகொள்ளவில்லை.

அதன் பின்னர் நடந்த சில சம்பவங்கள் அரச மரபை மீறியது எனக் கூறி தாமஸ் மெர்க்கலிடம் இருந்து அவரது மகளும் தற்போது சசெக்ஸின் டச்சஸ் என அறியப்படும் மேகன் மெர்க்கல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.

ஆனால் தம்மை அரச குடும்பம் வேண்டும் என்றே ஒதுக்கி வைப்பதாகவும், தமது மரணம் நெருங்கி விட்டத்தை தாம் உணர்வதாகவும் தாமஸ் மெர்க்கல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இனிமேலும் தம்மை ஒதுக்கி வைக்க வேண்டாம் எனவும், தமது மகளும் மருமகனும் தம்மை அழைத்து பேச வேண்டும் எனவும் அவர் கெஞ்சியுள்ளார்.

அடுத்த வாரம் தாமஸ் மெர்க்கல் 74 வயதை எட்டுகிறார். மாரடைப்பு மற்றும் இருதய அறுவைசிகிச்சைக்கு பின்னர் நீண்ட நாட்கள் தாம் உயிருடன் இருப்பது சந்தேகம் என தெரிவித்துள்ள தாமஸ் மெர்க்கல்,

மேகன் மெர்க்கலுக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்க மறுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி அரண்மனை அதிகாரிகளும் தமக்கு உரிய பதிலை தர மறுக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்