செரினா வில்லியம்சின் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய பிரித்தானியா இளவரசி மெர்க்கல்: அப்படி என்ன சொன்னார்?

Report Print Santhan in பிரித்தானியா
503Shares
503Shares
ibctamil.com

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்சின் பேச்சைக் கேட்டு பிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் 11-ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் கெர்பர் 25-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் செரினா வில்லியம்சை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் செரினா வில்லியம்சால், கெர்பர் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இப்போட்டி முடிந்த பின்னர் செரினா வில்லியம்ஸ் கூறுகையில், இது ஒரு ஏமாற்றம் தான், ஆனால் எனக்கு இது ஏமாற்றமான முடிவு போன்று இல்லை.

தற்போது நான் செய்து கொண்டிருப்பது அனைத்து தாய்மார்களுக்காகத் தான், இன்று வெற்றியை அவர்களுக்கு சமர்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

ஆனால் முடியவில்லை.

ஏஞ்சலிக் கெர்பர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், எனக்கு அவர் ஒரு நல்ல நண்பர். அவரின் வெற்றியை கண்டு நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன்.

இது அவருக்கு முதல் சாம்பியன் பட்டம் என்று நினைப்பதாக கூறியுள்ளார்.

இப்போட்டியை காண்பதற்கு செரினா வில்லியம்சின் நெருங்கிய நண்பரும் பிரித்தானியா இளவரசியுமான மேகன் மெர்க்கல் வந்திருந்தார்.

போட்டியின் முடிவுக்கு பின் செரினா வில்லியம்ஸ் நான் இதை அனைத்து தாய்மார்களுக்காக செய்கிறேன் என்று கூறியவுடன் மேகன் மெர்க்கல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகவும் ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டதாகவும் பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

மெர்க்கல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

செரீனா வில்லியம்சிற்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் ஓய்வில் இருந்த இவர் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி வரைக்கும் தகுதி பெற்று போராடி தோல்வியடைந்துள்ளார்.

இருப்பினும் செரீனா வில்லியம்ஸ் அனைத்து தாய்மார்களுக்கும் ஒரு உதாரணம், உங்களை நினைக்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று அமெரிக்க நடிகை Eva Longoria Basto தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்