பிரித்தானியா விமானநிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதிர்ச்சியில் உறைந்த கால்பந்தாட்ட ரசிகர்கள்

Report Print Santhan in பிரித்தானியா
784Shares
784Shares
ibctamil.com

பிரித்தானியா விமானநிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் அந்நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ்-குரோசியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இரு அணிகள் மோதும் இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த கால்பந்தாட்ட தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி போட்டி வரை தகுதி பெற்றது.

அரையிறுதிப் போட்டியில் குரோசியா அணியுடன் அடைந்த தோல்விக்கு பின்னர், இன்றைய மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடனும் இங்கிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி நாளை நாடு திரும்பவுள்ளதாகவும், அணி வீரர்கள் அனைவரும் பர்மிங்காம் விமானநிலையத்தில் வந்திரங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் அரையிறுதி வரை முன்னேறி தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களை வரவேற்கவும், பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவில் இருக்கும் பர்மிங்காம் விமானநிலையம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்களை பார்க்க ரசிகர்கள் வரவேண்டாம் எனவும் அதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதைக் கண்ட இணையவாசி ஒருவர், இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் உங்களின் அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதற்கு விமானநிலைய சார்பில், உங்களுடைய உணர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இது எங்களின் முடிவு அல்ல என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்