பிரித்தானியாவில் அடுத்த சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை: 164 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
199Shares
199Shares
ibctamil.com

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கையானது கடந்த 164 ஆண்டுகளில் முதன் முறை எனவும், இதுவரை வெப்பக்காற்றால் அவதிப்பட்டு வந்த பிரித்தானியர்களுக்கு நற்செய்தியாகவும் அமையும் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி மணிக்கு 30 மில்லி மீற்றர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுவும் பிரித்தானியாவில் முதன்முறை என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி பிரித்தானியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை என்பது கடந்த 164 ஆண்டுகளில் முதன் முறை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வேல்ஸ் மற்றும் தென்பகுதி இங்கிலாந்தில் இடியுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புகள் மிக அதிகம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்