தொடரும் பூனை கொலைகள்: பீதியில் பிரித்தானியர்கள்

Report Print Kabilan in பிரித்தானியா
270Shares
270Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் கொல்லப்பட்டு வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சாண்டெல்லே என்பவரின் பூனை காணமல் போன போது பக்கத்து வீட்டுக்காரர் அதனை இறந்த நிலையில் தனது வீட்டின் அருகே பார்த்ததாகவும், அதன் உடலை மறைக்க துணி எடுத்து வந்து பார்த்தபோது அது அங்கு இல்லை எனவும் அதிர்ச்சியாக சாண்டெல்லேவிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் சில நாட்கள் கழித்து சாண்டெல்லேவின் பக்கத்து வீட்டு புல்வெளிப்பகுதியில் வால் துண்டிக்கப்பட்டு, தலை முதல் வயிற்று பகுதி வரை அறுக்கப்பட்டு, குடல்கள் வெளியே தொங்கியபடி இறந்து கிடந்துள்ளது

ஸ்கூட்டர் என்னும் அந்த பூனை இறந்தது தற்ச்செயலானது அல்ல, கொலை என்பது பின்பு தான் தெரியவந்தது.

தெற்கு லண்டனில் உள்ள கிரோய்டன் பகுதியில் தான் முதலில் இதுபோன்று பூனைக் கொலைகள் நடந்து வந்திருக்கிறது.

ஆனால் அதன் பிறகு பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளான கெண்ட், பர்மிங்ஹாம், ஐல் ஆஃப் வைட் மற்றும் விரால் ஆண்ட் ஷெஃபீல்டிலும் இந்த கொலைகள் பரவியது.

பொலிஸ் துப்பறியும் நிபுணரான ஆண்டி கோலின்ஸ் இந்த கொலைகள் குறித்து கூறுகையில்,

பூனைகள் பெண்மையுடன் தொடர்புடையவை என்பதால் தான் கொலையாளி பூனைகளை கொல்கிறார். மேலும் இது பூனைகளுடன் மட்டும் நின்று விடாது.

பெண்கள், சிறுமிகளின் மீதும் இந்த தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளது என அதிர்ச்சியளிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்