கனடாவில் இளவரச தம்பதிகளுக்கு எதிராக போராட்டம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எட்டு நாள் சுற்றுப் பயணமாக கனடா வந்துள்ளார்.

கனடா பிரதமர் மற்றும் பொதுமக்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் சில பேர் இணைந்து கொண்டு இளவரச தம்பதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Immigration Services Society -க்கு வெளியே கூடியிருந்த நபர்கள், No Kings என்ற பதாகைகள் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

நாங்கள் ஒருபோதும் அரச குடும்பத்தினர்களை கொண்டாட மாட்டோம் என முழக்கமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments