ரஷ்ய ஜனாதிபதியை ரகசியமாக சந்திக்க பிரித்தானிய மாணவர்கள் பட்ட கஷ்டங்கள்!

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா

பிரித்தானிய பள்ளி மாணவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற தெரசா மே உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் அனைவரும் புடின் நேரம் ஒதுக்குவதற்காக காத்திருக்கும்போது, ஈட்டன் பள்ளி மாணவர்கள் ரஷிய ஜனாதிபதியை சந்தித்து அசத்தினர்.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இது மாணவர்களின் சொந்த முயற்சியால் நடந்த ஒரு ரகசிய சந்திப்பு. ரஷ்ய தூதரகம் மாஸ்கோ செல்ல 10 மாணவர்களுக்கு விசா வழங்கியதாக தெரிவித்துள்ளது.

"பத்து மாதத்தில் 1,040 மின்னஞ்சல்கள், 1,000 குறுஞ்செய்திகள், உறக்கமற்ற ஏராளமான இரவுகள், ஓயாத மன அழுத்தம், கல்வியில் கவனக் குறைவு ஆகியவற்றிக்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்திக்கிறோம்.

மனிதராக சிறுவராக இருந்தாலும் மனிதநேயத்தில் மிகவும் உயர்ந்தவர் என்று ஈட்டன் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் 19 பிரதமர்கள் இந்த ஈட்டன் பள்ளியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments