பிரித்தானியாவில் புர்கினிக்கு தடை வருமா?

Report Print Fathima Fathima in பிரித்தானியா

முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு தடை விதிக்க பிரிட்டனின் பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் யூகவ் அமைப்பு சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

அதில், முகத்திரை அணிய தடை விதிக்க வேண்டும் என 57 சதவித மக்களும், தடை விதிக்க கூடாது என 25 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும் "புர்கினி' என்று அழைக்கப்படும் முழு நீள நீச்சல் உடை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று 46 சதவீதத்தினர் கருதுவதாகவும், 30 சதவீதத்தினர் புர்கினிக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

சமீபத்தில் பிரான்சில் புர்கினி உடை, மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பல்வேறு மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று ஜேர்மனியிலும் யூகவ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் 62 சதவீதத்தினர் முகத்திரைக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments