புகார் தெரிவிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை: ரூ.1.41 கோடி இழப்பீடு வழங்கிய பொலிஸ்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் புகார் தெரிவிக்க சென்ற பெண் ஒருவர் பொலிசாரால் அவமதிக்கப்பட்ட குற்றத்திற்காக அவருக்கு ரூ.1.41 கோடி இழப்பீடு வழங்க காவல் துறை தீர்மானித்துள்ளது.

பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த அப்பெண் கிரேட்டர் மான்செஸ்ட்டர் பொலிசாரிடம் புகார் தெரிவிக்க சென்றுள்ளார்.

பொலிஸ் விசாரணையின்போது முன்னால் காதலன் எவ்வகையில் சித்ரவதை செய்தார் என்ற தகவல்களை பெண்ணிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு சம்மதித்த பெண் ‘தகவல்களை வெளியே யாருக்கும் தெரிவிக்க கூடாது’ என்ற நிபந்தனையுடன் அப்பெண் பொலிசாரிடம் அனைத்து தகவல்களையும் கூறியுள்ளார்.

ஆனால், பெண்ணிடம் தகவல்களை பெற்ற பொலிசார் அவற்றை பத்திரிகைகளுக்கு அளித்ததால், அவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரித்தானிய நாட்டு சட்டப்படி, விசாரணையின்போது பொலிசாரிடம் தெரிவிக்கப்படும் தகவல்கள் புகார் தெரிவிப்பவரின் ஒப்புதல் இல்லாமல் வெளியே விடுவது சட்டவிரோதமானது ஆகும்.

தனது எதிர்காலத்தை சீரழிக்கும் நோக்கில் தன்னைப் பற்றிய தகவல்களை வெளியிட்ட குற்றத்திற்காக பொலிசார் மீது பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெண் தொடர்ந்து வழக்கில் பொலிசார் மீது குற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், பெண்ணிற்கு 75,000 பவுண்ட்(1,41,30,208 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்கவும் கிரேட்டர் மான்செஸ்ட்டர் பொலிசார் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments