இந்தியாவின் அருவி ஹொகேனக்கல் பற்றி தெரியுமா?

Report Print Kabilan in சுற்றுலா
98Shares
98Shares
ibctamil.com

கர்நாடகம் மற்றும் தமிழக எல்லைப்பகுதிகளில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கி வரும் ஹொகேனக்கல் அருவி பற்றி இங்கு காண்போம்.

பெங்களூரிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை மற்றும் சேலத்திலிருந்து முறையே 343 கி.மீ மற்றும் 90 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது ஹொகேனக்கல் அருவி.

கன்னட மொழியில் ’ஹொகே’ என்பது புகையையும், ‘கல்’ என்பது பாறையையும் குறிக்கும். எனவே, மலைப்பாறைகள் வழி விழுந்து சிதறும் அருவி நீர், புகை மண்டலமாக இப்பகுதி முழுவதும் வியாபித்திருப்பதால், இது ’ஹொகேனக்கல் அருவி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த அருவி, ஒற்றை அருவியாக இல்லாமல், அருவிகளின் தொகுப்பாக காட்சியளிப்பதால், இது இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

தலைக்காவேரியில் உற்பத்தியாகும் காவிரி ஆறானது, மூலிகைச் செடிகள் நிறைந்த மலைப்பிரதேசங்கள் வழியாக பாய்ந்தோடி வருவதால், இந்த அருவியின் நீர் மருத்துவ குணம் கொண்டது என கூறப்படுகிறது.

ஹொகேனக்கல் அருவியில், 'Oil massage' செய்து கொண்டு அருவியில் குளிப்பது பரவசநிலையை அளிக்கும். மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த எண்ணெய் குளியல் இங்கு சிறப்பு வாய்ந்ததாகும்.

இதற்காகவே, அரசு அங்கீகாரம் பெற்ற நிபுணர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த அருவி இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றாகும்.

’மூங்கில் காடுகளே’, ‘மழையே மழையே’ போன்ற பாடல்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்வது திகில் கலந்த அனுபவத்தை தரும். ஒரு பரிசலில் எட்டு பேர் வரை பயணிக்கலாம்.

மேலும், காவிரி ஆற்றில் நீங்கள் மீன் பிடிக்கலாம். அவற்றை சமைத்துக் கொடுக்க பல கடைகள் இங்கு உள்ளன.

ஹொகேனக்கல் அருவி மேலகிரி எனும் மலையில் இருந்து விழுகிறது. இந்த மலையில் ’Treking' செய்வது புதிய அனுபவத்தை கொடுக்கும்.

உலகிலேயே மிகவும் பழமையான பாறைகளாக அறியப்படும் ‘கார்பானைட் பாறைகள்’, ஹொகேனக்கல் பகுதியில் காணப்படுகிறது.

கோடைக்காலங்களில், ஆற்றின் வேகவும் குறையும் போது, இங்கு நீந்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அருவியின் உச்சியில் உள்ள பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டவை. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஹொகேனக்கலில் தமிழக அரசுக்கு சொந்தமான விடுகளும், நிறைய தனியார் விடுகளும் உள்ளன. இவற்றுக்கான கட்டணம், நாள் ஒன்றுக்கு 200 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்