டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் பேபால் எடுத்துள்ள அதிரடி முடிவு

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
34Shares

கிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது.

எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன.

பின்னர் சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கிரிப்ட்டோ கரன்ஸியின் பாதுகாப்பினை அதிகரித்து மீளவும் பயன்பாட்டிற்கு விட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கிரிப்ட்டோ கரன்ஸி தொடர்பில் பேபால் நிறுவனமும் புதிய முடிவினை எடுத்துள்ளது.

இதன்படி அமெரிக்காவில் உள்ள பயனர்கள் பேபால் கணக்கினை பயன்படுத்தி கிரிப்ட்டோ கரன்ஸிகளை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும் என அறிவித்துள்ளது.

எனவே Bitcoin, Ethereum, Bitcoin Cash, மற்றும் Litecoin போன்ற கிரிப்ட்டோ கரன்ஸிகளை இவ்வாறு கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்