விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க யூடியூப் சேனல் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் உலகின் மிகப்பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.

இங்கு வீடியோக்களை பார்வையிடுவது மாத்திரமன்றி வீடியோக்களை பதிவேற்றம் செய்தல் அதன் மூலம் பணம் சம்பாதித்தல் போன்றவற்றினையும் பயனர்கள் மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கு யூடியூப் சேனல் ஆனது சில தகைமைகளை கொண்டிருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்கள் வீடியோக்களில் விளம்பரம் செய்வதற்கான அனுமதியை பெற முடியும்.

இதன்படி யூடியூப்பின் கொள்கைகளை பின்பற்றி யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோன்று கூகுள் அட்சென்ஸ் வழங்கப்பட்டுள்ள நாடு ஒன்றிலிருந்தே யூடியூப் சேனலுக்கான விளம்பரத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விளம்பரத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னரான இறுதி 12 மாதங்களுக்குள் சுமார் 4,000 மணித்தியாலங்கள் வரை உங்கள் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பார்வையிடப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் குறைந்தது 1,000 சந்தாதாரர்களையாவது யூடியூப் சேனல் கொண்டிருக்க வேண்டும்.

இறுதியாக யூடியூப் உடன் இணைப்பதற்கு ஒரு அட்சென்ஸ் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மாத்திரமே யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து விளம்பரங்களைப் பெற்று பணம் சம்பாதிக்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்