அறிமுகமாகியது iOS 13.4 பதிப்பு: அப்டேட் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பு

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது தனது iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பினை அண்மையில் வெளியிட்டிருந்தது.

iOS 13.4 எனும் குறித்த புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட 15 வரையான குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளன.

எனினும் இப்புதிய பதிப்பினை அப்டேட் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இப் பதிப்பில் VPN வலையமைப்பினை பயன்படுத்துவதில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாடானது பயனர்களில் தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடிய சாத்தியத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தான் இப் பதிப்பினை அப்டேட் செய்ய வேண்டாம் என iOS சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாட்டினை பிரபல VPN சேவை வழங்குனரான Proton நிறுவனம் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்