காணாமற்போன பிள்ளைகளை பெற்றோருடன் இணைப்பதற்கு பொலிசார் பயன்படுத்தவுள்ள தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
30Shares

பெற்றோர்களிடமிருந்து பிரிந்து காணாமற்போன நிலையில் உள்ள பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்களுடன் மீண்டும் இணைப்பதற்கு புதிய முயற்சி ஒன்றினை இந்திய பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக விசேட Facial Recognition அப்பிளிக்கேஷன் ஒன்றினை பயன்படுத்தவுள்ளனர்.

இந்தியாவில் வருடம்தோறும் பத்தாயிரம் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து காணாமற்போகின்றனர்.

இதில் பலர் வீதியோரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி யாசகம் செய்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற பல்வேறு தொழில்களுக்கு வலிந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இவற்றினை தடுப்பதற்காகவே தெலுங்கான பொலிசார் Operation Smile எனும் குறித்த அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளனர்.

ஜனவரி மாதம் 3,000 சிறார்களின் முகங்களை ஸ்கான் செய்து அவர்களை பெற்றார்களுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்