வானுயர்ந்த மரங்களின் கிளைகளை வெட்ட இப்படி ஒரு தொழில்நுட்பமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

முன்னொரு காலத்தில் மரங்கள், கிளைகளை வெட்ட கத்திகளையும், கோடரிகளையும் பயன்படுத்தினார்கள்.

அதன் பின்னர் தற்போது Chainsaw எனும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இதன் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் மரம், கிளைகளை வெட்ட முடியும்.

அதேபோன்று மின்கம்பங்களில் படரக்கூடிய மிகவும் உயரமான மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு தற்போது மற்றுமொரு அபாரமான தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகின்றனர்.

அதாவது உலங்குவானூர்தியில் இணைக்கப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான Chainsaw பயன்படுத்தப்படுகின்றது.

சுழலக்கூடிய 10 பிளேட்களை கொண்டதும், 830 பவுண்ட் எடை உடையதுமான குறித்த Chainsaw சாதனத்தினை Aerial Solutions Inc எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

தற்போது இதன் வீடியோ இணையத்தளங்களில் தீயாகப் பரவிவருகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்