முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது அமேஷானின் Dash Button சேவை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

பிரம்மாண்டமான மின் வியாபார சேவையினை வழங்கிவரும் அமேஷான் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் Dash Button எனும் சேவையினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது.

இதற்காக சில பொருட்களின் பெயர்கள் அடங்கிய பொத்தான்களை பயனர்களுக்கு அமேஷான் விற்பனை செய்யும்.

குறித்த பொருட்கள் ஆர்டர் செய்ய வேண்டும் எனின் அப் பொத்தானை அழுத்த வேண்டும்.

இதன்போது இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக அமேஷான் நிறுவனத்திற்கு தகவல் செல்லும்.

பின்னர் அமேஷான் நிறுவனம் குறித்த பொருட்களை அனுப்பி வைக்கும்.

இச் சேவைக்கான பொத்தான்களை விற்பனை செய்வதை இந்த வருட ஆரம்பத்தில் அமேஷான் நிறுவனத் நிறுத்தியது.

எனினும் ஏற்கனவே Dash Button வைத்திருக்கும் பயனர்களுக்கு சேவையை தொடர்ந்து வழங்கி வந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் இச் சேவையையும் நிறுத்தவுள்ளதாக அமேஷான் அறிவித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்