வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிய புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

DNT மற்றும் TNT போன்ற வெடிபொருட்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிய புதிய தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதற்காக விசேட சென்சார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை இடத்துக்கு இடம் இலகுவாக எடுத்துச்செல்ல முடியும்.

Indian Institute of Technology (IIT) எனும் தொழில்நுட்ப நிறுவனமே குறித்த சென்சாரினை வடிவமைத்துள்ளது.

இதில் காணப்படும் பல்பகுதியத்தின் நிறமானது வெடிப்பு சம்பவங்களை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை கண்டறிந்தவுடன் நிறம் மாறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களில் உள்ள இரசாயனப் பதார்த்தங்கள் காற்றில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன.

இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்