வாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
219Shares

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்னணி மெசஞ்சர் சேவையான வாட்ஸ் ஆப்பில் குறைபாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் தனிநபர் உரிமையை மீறக்கூடிய தவறு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த 22 வயதான Zonel Sougaijam என்பவரே இந்த தவறை கண்டுபிடித்துள்ளார்.

இதனால் இவருக்கு பேஸ்புக் நிறுவனம் 5000 அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கியுள்ளது.

அத்துடன் வாட்ஸ் ஆப் குறைபாடுகளை கண்டுபிடிப்பதற்கான Facebook Hall of Fame 2019 குழுவிலும் குறித்த இளைஞன் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இக் குழுவில் 94 பேர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் Zonel Sougaijam 16 வது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்